Editorial / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுடன், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமா? எனக் கேட்டுள்ள உள்ளூராட்சி மன்ற முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இந்தக் கேள்வி, சகலரிடத்திலும் எழுந்துள்ளது. அதேபோல, புதிய முறைமையின் கீழ், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில், அப்போதிருந்த 225 எம்.பிக்களும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர் என்றார்.
“2015ஆம் ஆண்டு நல்லாட்சி ஆட்சியமைத்த போது, ‘அரசின் எண்ணம்’ என்ற முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்போது, சகல இனத்தவரினதும் அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொண்டோம். விசேடமாக யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவது குறித்து, நாம் அதிகமாகப் பேசினோம்” என்றார்.
இப்போதும் பாரிய நிதியைச் செலவிட்டு, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக, மாற்று வழியொன்றை ஆராயுமாறு, அரசாங்கத்திடம் மகா சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அதேபோல் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதால், நாட்டிலுள்ள சகல இனங்களைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பை ஒரு வருட காலத்துக்குள் உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பில் அதிகளவாகக் கதைக்கப்படுகின்றன. சுகாதாரத் தரப்பும் சகல மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக இணைந்து, கலந்துரையாடலை முன்னெடுத்தால் இப்பிரச்சினையை இலகுவாகத் தீர்க்கலாம் என்றார்.
ஆனால், இந்தக் கலந்துரையாடலில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளக் கூடாது. இது முக்கியமான பிரச்சினை என்பதால், அரசாங்கம் இதுதொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் எனக் கேட்டுக்கொண்டார்.
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago