2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

‘மின்சார கட்டணம் அதிகரிக்கப்படாது’

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்கினாலும், மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் மின்சாரத்தின் கட்டணம் அதிகரிக்கப்படாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த மூன்றரை வருடங்களாக மின்சார கட்டணத்தில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென்றும், பிரதி அமைச்சர் அஜித். பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரித்தாலும் மின்சார கட்டணத்தில் மாற்றம் வராது எனவும் வரவு செலவுத்திட்டம் ஊடாகவும் மின் கட்டணம் அதிகரிக்கப்படாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின்சார சபை நட்டமடைந்தாலும் மக்களுக்கு நிவாரண விலைகளில் மின்சாரத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .