Freelancer / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி படிப்படியாக நிலைபெற்று வருவதால், கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், காலை வேளையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
9 hours ago
9 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
20 Mar 2026