2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

முக்கோண காதலால் பல்கலைக்கழக மாணவன் மரணம்

Editorial   / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்தமையால் ஏற்பட்ட தகராறை அடுத்து, யாழ்.பல்கலைக்கழக மாணவன்,  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.  

யாழ். பல்கலைகழகத்தில் கல்வி கற்கும்  கொட்டகலையைச் சேர்ந்த 24 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ். பல்கலைகழகம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவிகள் இருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பு, சண்டையில் முடிந்ததால் இவர் தவறான முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X