2025 மே 01, வியாழக்கிழமை

முடக்குமாறு அரசிடம் கோருவது முட்டாள்தனம்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிபுணர்களின் கருத்துக்கு செவிசாய்க்காத அரசாங்கத்திடம் முடக்கத்தை அமுல்படுத்துமாறு முறையிடுவது முட்டாள்தனமானது என்று கூறிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புக்காக சுய முடக்கத்தில் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அரச ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் ஏனென்றால் அவர்களின் உயிர், எதையும் விடப் பெரிது என்பதை உணரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .