2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

முடிந்தால் தன்னை பதவி நீக்குமாறு வசந்த சேனநாயக்க சவால்

Editorial   / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்யப்போவதில்லை என,  வசந்த சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் பதவியில் தான் தொடர்ந்து செயற்படுவதுடன், முடிந்தால் தன்னை பதவியில் இருந்து நீக்கி காட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு  அவர் சவால் விடுத்துள்ளார்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, உடனடியாக கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக, கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் நேற்று (30) இரவு தெரிவித்திருந்தார்.

அத்துடன், அவர் விரைவில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என்றும், அகில விராஜ் காரியவசம் கூறியிருந்தார்.

கடந்த வருடம் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷவின் 52 நாள்கள் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்ட வசந்த சேனநாயக்க  பின்னர், ஐதேகவுக்குத் திரும்பியிருந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .