2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

முத்துவிநாயகத்துக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

6 இலட்ச ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் தலைவர்  கே. முத்துவிநாயகத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் இன்று கோட்டை மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபைக்குரிய மெல்சிறிபுர விவசாய பண்ணையில் உள்ள விடுதியை 2 வருடத்துக்கு வாடகைக்கு வழங்குவற்காக, வர்த்தகர் ஒருவரிடம், 6 இலட்சம் ரூபாயை  இலஞ்சமாக பெற முயற்சித்த போதே இவர்  ​நேற்றைய தினம்  இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .