Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 20 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து புதன்கிழமை (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் குறித்த மீனவர் சென்ற மீன்பிடி படகை மீனவர்கள் கடலில் இருந்து கரைக்கு வியாழக்கிழமை (19) கொண்டு வந்திருக்கிற போதும் மீனவர் இதுவரை கரை சேரவில்லை .
குறித்த மீனவர் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பவர்கள் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைபாட்டின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (20) சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் குறித்த படகில் இருந்த இரத்தக்கறை மற்றும் காயங்கள் மீனவரின் உடை மற்றும் ஏனைய பொருட்கள் மீதான தடயவியல் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் சுனாமியில் தன்னுடைய ஐந்து பிள்ளைகளை பறிகொடுத்த நிலையில் சிலாவத்தை தீர்த்தக்கரையில் தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் வின்சன்டிப்போல் அன்ரனி கருணல் (அருமை) எனும் 62 வயதுடைய மீனவர் புதன்கிழமை (18) இரவு கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்றிருக்கின்றார்.
இந்நிலையில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற ஏனையவர்கள் குறித்த மீனவர் சென்ற படகு தனியாக கடலில் மிதந்து வருவதை அவதானித்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு கடலில் இருந்து அவர் பயணித்த படகினை கரைக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
முல்லைத்தீவு கடலிலே சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
தென்பகுதியில் இருந்து வருகை தந்து நாயாறு கொக்கிளாய் பகுதியில் இருந்து செல்லும் சட்டவிரோத மீன்பிடியாளர்கள் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் இருந்து செல்லும் மீனவர்கள் மற்றும் புல்மோட்டை பகுதியில் இருந்து வருகின்ற சட்டவிரோத மீன்பிடியாளர்கள் வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல், டயனமைற் பாவித்து மீன் பிடித்தல், உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகளை பாவித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் சாதாரண மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற முல்லைத்தீவு மீனவர்களுடன் தொடர்ச்சியாக பல்வேறு முரண்பாடுகளுடன் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்
அண்மையில் இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வந்த ஆறு படகுகள் முல்லைத்தீவு கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனுடைய பின்னணியாக குறித்த மீனவர் சட்டவிரோத மீன்பிடியாளர்கள் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் மீனவர்கள் மத்தியில் வலுப் பெற்றுள்ளது.
குறித்த மீனவரை தேடி எட்டு படகுகளில் மீனவர்கள் கடலில் வியாழக்கிழமை (19) காலை சென்று தேடிய போது எந்த விதமான தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் அவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
காணாமல் போன அந்த மீனவரை தேடி கடலில் சுமார் 25க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் வெள்ளிக்கிழமையும் (20) சென்று தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025