2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

முல்லைத்தீவு இளைஞன் படுகொலை: 4 இராணுவத்தினருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு முத்தியன்காடு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 32 வயதுடைய நபரின் மரணம் தொடர்பாக, சார்ஜென்ட் உட்பட நான்கு இராணுவ வீரர்களின் விளக்கமறியல் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாமுக்குள் இரும்புத் துண்டுகளை சேகரிக்க ஆகஸ்ட் 9 ஆம் திகதி சென்றதாக கூறப்படும் எதிரிமானசிங்கம் கபில்ராஜ் என்பவரின் மரணம் தொடர்பான வழக்கிலேயே இந்த நான்கு இராணு வீரர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இது. இராணுவ வீரர்களை அவர் கண்டதும் முகாமிலிருந்து  அந்த இளைஞன் தப்பிச் சென்றதாகவும், பின்னர் அவரது உடல் அருகிலுள்ள குளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதிவான் எஸ்.எச். மாருஸ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (19) ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 

அவர்கள் அடையாள அணிவகுப்புக்கும் உட்படுத்தப்பட்டனர், அதில் இருவர் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X