Freelancer / 2023 ஜூன் 15 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்ததற்காக ஆசிரியை ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியை தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரி இந்தூர் உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.
அந்த ஆசிரியை, அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
அம்மாநில அரசின் சுற்றறிக்கையின் பிரகாரம், ஊழியர் மூன்றாவது குழந்தை பெற்றால் அவரைப் பணியிலிருந்து நீக்க முடியும்.
இந்த விதியின்படி, அனைத்து வகையான தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று தன் தகுதியை நிரூபித்த ஒருவர், மூன்று குழந்தைகளின் பெற்றோராக இருந்தால் அவருக்கு அரசுப்பணி வழங்கப்படாது.
அப்பெண்ணுக்கு மூன்றாவது குழந்தை 2009ஆம் ஆண்டு பிறந்தது. ஆனால், 2020ஆம் ஆண்டுதான் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
12 minute ago
26 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
43 minute ago