2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மேலும் 425 பேர் வெளியேறினர்

Editorial   / 2020 மே 13 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா – பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 129 பேர் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் 425 பேர் இன்று (13) வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் குறித்த தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடற்படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 192 பேர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கான PCR பரிசதோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட 129 பேர் இன்று சொந்த இடங்களுக்கு திரும்பினர்.

இவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்பட்டன.

நாவலப்பிட்டி, அவிசாவளை, நுவரெலியா, கண்டி, குருநாகல், மொனராகலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களே இதன்போது விடுவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X