A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக பொதுப் போக்குவரத்தில் தொழிலுக்கு செல்வதற்கு அச்சம் காரணமாக, மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்த இளைஞர் ஒருவர் விபத்தில் மரணமாகியுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பணி நிறைவடைந்து, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்து மூன்றாவது பயணத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். குருணாகல் பிரதேசத்தில் சிவில் பொறியியலாளராக பணியாற்றும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .