Freelancer / 2026 மார்ச் 28 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியில், வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முற்பட்ட வேளை, உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதி விட்டு தப்பி சென்றுள்ளார்.
உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் சார்ஜண்ட் தர அதிகாரியான அல்பிறெட் என்பவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தினை ஏற்படுத்திய உழவு இயந்திர சாரதியை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் களமிறங்கி தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. R
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago