2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பாதயாத்திரீகர் கதிர்காமத்தில் திடீர் மரணம்

R.Tharaniya   / 2025 ஜூன் 29 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த  பாதயாத்திரை குழுவில்  ஒருவர்   கதிர்காமத்தில் திடீரென வெள்ளிக்கிழமை (27) மரணமானார்.

புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பொன்னம்பலம்( வயது 52) என்பவரே இவ்வாறு திடீரென மரணமானவர்.

கடந்த மே மாதம் 01 ஆம் திகதி உடப்பிலிருந்து  யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதிக்கு வந்து 56 நாள் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர் என பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.
அவர்  பாதயாத்திரை செல்வது மூன்றாவது தடவை ஆகும்.

இம்முறை கதிர்காமத்தை வந்தடைந்த போது அவரது மனைவி பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் பஸ்ஸில் கதிர்காமம் வந்தனர்.

 குடும்பத்தினர் சகிதம் கதிர்காமம் ஆலயத்துக்குள் வௌ்ளிக்கிழமை (27) காலை 11 மணியளவில் பிரவேசித்த பொழுது திடீரென சரிந்து விழுந்தார்.

 மறுகணம் அவரை கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர் .
 அங்கே அவர் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

 தற்போது அவரது பிரேதம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 அங்கு அவரது பிரதேச பரிசோதனையின் பின் அவரது பூதவுடல் உடப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது என்று பாதயாத்திரைக் குழுத்தலைவர் ஜெயா வேல்சாமி மேலும் தெரிவித்தார்.

வி.ரி. சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X