Editorial / 2026 மார்ச் 19 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும் இன்று புதன்கிழமை (19) விரிவுரைகளைப் புறக்கணித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி (சுதந்திர தினம்), வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கறுப்புக் கொடி போராட்டத்தின் போது, கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் செயலானது மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் ஒரு அடக்குமுறை எனக் குறிப்பிட்டே மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கலைப்பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில், "விசாரணை எனும் பெயரில் மாணவர்களை அச்சுறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். எமது சக மாணவர்களின் உரிமைகளுக்காக அனைத்து மாணவர்களும், சிவில் அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு வலுசேர்க்க வேண்டும்" எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
17 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago