Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 01 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் பற்றிய விசேட வர்த்தமானி சனிக்கிழமை (31) வெளியிடப்பட்டது.குறித்த அறிவித்தல் மூலம் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் றிஸ்லா வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.
மாநகரசபைத் தேர்தலில், பட்டியல் வேட்பாளராக பாத்திமா றிஸ்லா ஆசிரியரை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.
இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதன்படி யாழ் மாநகரசபையின் முதல் பெண் பிரதிநிதியாக ஆசிரியை பாத்திமா றிஸ்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணக்கிளைத் தொகுதி தலைவர் சிறில் மற்றும் செயலாளர் ஆர்னோல்ட் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.
பாறுக் ஷிஹான்
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago