Editorial / 2019 நவம்பர் 01 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையேயான வர்த்தக விமான சேவைகள், நவம்பர் 10ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் எச்.எம்.சி.நிமல்சிறி, ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான எலையன்ஸ் ஏர் வழங்கிய நேர அட்டவணையின்படி விமான சேவைகள் இயங்கும் என்று தெரிவித்தார்.
விமான நிலையங்களுக்கூடாக, தினசரி விமானசேவைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம்- சென்னைக்குரிய பயணச்சீட்டுக் கட்டணங்கள் தொடர்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஒருவழி பயணத்துக்கான கட்டணம் 15,690 ரூபாய் என்றும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 7,879 இலங்கை ரூபாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் உள்நாட்டு விமான நிறுவனமான ஃபிட்ஸ் ஏவியேஷன் (பிரைவேட்) லிமிடெட், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையில், வாரத்துக்கு மூன்று விமான சேவைகளை, 10 ஆம் திகதி முதல் இயக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை 32 முதல் 50 நிமிடங்கள் வரை ஆகும் என்றும் அறிவித்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு முகவர் மூலம், விமானங்களின் அந்தந்த வலைத்தளங்களிலிருந்து, மக்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் இலங்கைக்கான இந்திய யாழ்ப்பாண கொன்சலெட் ஜெனரல் நிலையத்தினூடாக, விசா பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026