Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வந்த யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், வைத்தியாசலை நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உயிரிழந்த யுவதியின் உறவினர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.
சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 வயதுடைய யுவதி, இன்று (28) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கடந்த 13 நாட்களாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (27) தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த யுவதியை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு தாம் கோரிக்கை விடுத்த போதும் அதனை வைத்தியசாலை நிர்வாகத்தினர் நடைமுறைப்படுத்தவில்லை என, யுவதியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026