2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரணதுங்கவினால் ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல்

Thipaan   / 2016 மார்ச் 16 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ஊடகவியலாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

சி.எஸ்.என் நிதிமோசடி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, தனது சகோதரரான நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான அமர்வுக்கு சமுகமளிப்பதற்காக, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்த தம்மிக்க ரணதுங்கவை, ஊடகவியலாளர்கள் படம்பிடிக்க முயன்றபோதே, அவர் கொலை மிரட்டல்  விடுத்துள்ளார்.

பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், தம்மிக்க அச்சுறுத்தல் விடுத்ததைப் பதிவு செய்துள்ளதாகவும் அதனைக் கொண்டு அவருக்கெதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .