2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

ரணில் எம்.பி ஆவாரா?: ருவன் அதிரடி பதில்

Editorial   / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டிற்கு நல்லது என்று தான் நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தார்.

"ஆனால் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் இல்லை. அவர் பாராளுமன்றத்திற்குச் செல்வதாயின், சரியான நேரம் வரும்போது செல்வார். ஆனால் தற்போது அது தொடர்பில் எவ்விதமான கலந்துரையாடல்களும் இல்லை” என்றார்.    

பிட்டகோட்டே, சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (07)  நடைபெற்ற அன்னதானத்தைத் திறந்து வைத்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது ஐக்கிய தேசியக் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இவ்வாறு கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருவது குறித்து நிறைய பேச்சுக்கள் எழுந்துள்ளன, மேலும் அவரை பாராமன்றத்திற்கு அனுப்ப ஏதேனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆசி பெறுவதற்காக   கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில்  இந்த அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X