2026 மே 06, புதன்கிழமை

‘ரணிலா சஜித்தா? 106 உறுப்பினர்கள் தீர்மானிப்பர்’

ஆர்.மகேஸ்வரி   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர், கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவா அல்லது பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவா என்பது குறித்து, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசாங்கத் தரப்பு உறுப்பினர்கள் 106 பேர் தீர்மானிக்க வேண்டுமென்பதே,அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தீர்மானம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

 குறித்த 106 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இரகசிய  வாக்கெடுப்பைக் கோரியாவது  ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வது சிறந்த விடயமென்றும் தெரிவித்தார்.

இன்று (16) இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .