2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ரவி மட்டுமே பேச சந்தர்ப்பம்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், நேற்று வியாழக்கிழமை (20), நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தின் ஒலிக் கட்டுப்பாட்டமைப்பும் ஒலிவாங்கிக் கட்டமைப்பும் உரிய முறையில் சேவையாற்றவில்லை.   

மேற்படிக் கட்டமைப்புகளின் பழுதுபார்க்கும் பணிகள், முழுமையாக முடிவடையாமை காரணமாகவே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரால், கருத்துத் தெரிவிக்க முடியாத நிலைமையும் ஏற்பட்டிருந்தது.   

இவ்வாரத்தில், நாடாளுமன்றப் பணிகள் நிறுத்தப்பட்டே, மேற்படி கட்டமைப்புகளின் பழுதுபார்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “மேற்படி நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவே சமர்ப்பிப்பதால், அவருடைய ஒலிவாங்கி மாத்திரம் செயற்படும்” என்றார்.   

கடந்த வாரத்தில், கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்யும் கட்டமைப்பு பழுதுபார்க்கப்பட்டதாகவும் ஒலிவாங்கி மற்றும் ஒலிக் கட்டுப்பாட்டமைப்பு ஆகியவற்றைப் பழுதுபார்க்கும் பணிகள், தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறிய சபாநாயகர், ஒலிவாங்கிகள் அனைத்தும் கழற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .