2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரவிராஜ் கொலை வழக்கு: ‘தீர்ப்பை இரத்துச்செய்யக்கோரி மேன்முறையீடு

Gavitha   / 2017 ஜனவரி 11 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் பிரதிவாதிகள், வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு வழங்கப்பட்ட ஜூரிகளின் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு, ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.

இதேவேளை, இந்த வழக்கை ஜூரிகளின்றி விசாரணைக்கு உட்படுத்துமாறும், அந்த மேன்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.  

“பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழேயே சுமத்தப்பட்டுள்ளன. அவ்வாறானதொரு வழக்கை ஜூரிகளின் முன்பாக விசாரணைக்கு எடுத்துகொள்வது குறைபாடுகளைக் கொண்டதாகும். 

“இதேவேளை, தமது தரப்பு சட்டத்தரணிகள், ஜூரிகள் சபை தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர்.  

“எனினும், தினந்தோறும் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையின் பின்னர், டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு, ஜூரி சபையினால் பிரதிவாதிகள் அனைவரும் குற்றவாளிகள் அல்லர் என தீர்ப்பளித்ததன் பின்னர், மேல் நீதிமன்ற நீதிபதி அவ்வனைவரையும் விடுதலை செய்துள்ளார்” என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .