Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 04 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அறுவருக்கு எதிராக பொலிஸாரினால் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடற்படை உறுப்பினர்கள் மூவர், பொலிஸ் அதிகாரி மற்றும் கருணா செயற்பாட்டு குழுவின் உறுப்பினர் இருவருக்கு எதிராகவே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து கடற்படை வீரர்களுக்கும் எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு, சட்டமா அதிபருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம், ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி, நடராஜா ரவிராஜ் கொழும்பில் வைத்து சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பில், கடற்படை வீரர்கள் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டதுடன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .