2026 மே 14, வியாழக்கிழமை

dd

’ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னிக்க முடியாது’

Niroshini   / 2021 மே 24 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென, புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் நாராயணசாமி மேலும் கூறியுள்ளதாவது,

“ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சந்தேகநபர்கள் சிறையில் உள்ளனர். இந்நிலையில், அவர்களை மனிதாபிமான முறையில் விடுதலை செய்வதற்கு, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி  உள்ளிட்டோர் இணங்கியுள்ளனர்.

“ஆனாலும், ராஜீவ் காந்தியின் இழப்பு, நாட்டுக்கு மட்டுமன்றி காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும்.  இருப்பினும், அவரைக் கொன்றவர்களை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இவை, சில அரசியல் கட்சி மற்றும் பொதுநலவாதிகளின் கோரிக்கையாக இருக்கலாம்.

“எனினும், காங்கிரஸின் தொண்டன் என்ற அடிப்படையில், தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆகவே, அவர்களை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .