2025 ஜூலை 16, புதன்கிழமை

ரிஷாட்டின் சகோதரருக்கு குண்டுதாரியுடன் நேரடி தொடர்பு

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, முன்னாள் அமைச்சர் ரிஷாட்டிக் சகோதரருக்கும் தற்கொலை குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பு இருந்துள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தரணி இரண்டு குண்டுதாரிகளுடன் தொடர்புகளை வைத்திருந்ததுடன், குண்டு தாக்குதல் திட்டமிடல், பல தீவிரவாத குழுக்களுடன் கொடுக்கல், வாங்கலை முன்னெடுத்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை ரிஷாட்டின் சகோதரர் குண்டுதாரியொருவருடன் பிரபல ஹோட்டல் ஒன்றில் குண்டு வெடிப்பு இடம்பெறுவதற்கு முன்னர்,   கலந்துரையாடியுள்ளமை விசாரணைகள் மூலம்  தெரியவந்துள்ளதென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .