Editorial / 2021 ஜூலை 20 , பி.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சுகம் பெறவும் விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்பவும் கோரி இறைவனிடம் பிரார்த்தனை இடம்பெற்றது.
இந்நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகராட்சி உறுப்பினர் எம்.எச்.எம். அப்துல் மனாபின் ஏற்பட்டில் அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எம். அப்துல் றஸாக் தலைமையில் கல்முனை பட்டின ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
கடந்த பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்திருக்கும் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அண்மையில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் சுகமாகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை பெற வேண்டும் என்றும் கல்முனை பட்டின ஜூம்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் துஆ பிராத்தனை நிகழ்த்தினார்.
இந்த துஆ பிராத்தனை நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஜூனைதின் மான்குட்டி, கல்முனை பிராந்திய முக்கியஸ்தர் கலீல் முஸ்தபா உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் சுகாதார வழிமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago