Editorial / 2026 ஜனவரி 11 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரி நாடாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் தேவைப்பட்டது.
தனது நண்பர் மூலம் திருநெல்வேலியைச் சேர்ந்த பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரை அணுகினார். அப்போது, ரூ.35 கோடி கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்த ஹரி நாடார், அதற்குப் பிரதிபலனாக ரூ.70 லட்சத்தை தொழிலதிபரிடம் பெற்றுக் கொண்டார்.
ஆனால், கடன் பெற்றுத் தரவில்லை, வாங்கிய ரூ.70 லட்சத்தையும் அவர் திருப்பி தரவில்லை. இந்நிலையில், தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், மாநகர மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இதில் ரூ.70 லட்சம் மோசடி செய்தது உறுதியான நிலையில், ஹரி நாடார், உடந்தையாக இருந்த சேலத்தை சேர்ந்த பாபு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
18 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 Jan 2026
21 Jan 2026