2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

லெஸ்லி நீக்கப்படவில்லை

Gavitha   / 2016 மார்ச் 03 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் லெஸ்லி காமினி, அவருடைய பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபேகோன் தெரிவித்துள்ளார்.

பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆயுள் காலத்தை இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்கவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய ஆணையாளர்களின் பதவிக்காலமும் நீடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், ஆணைக்குழுவின் செயலாளரின் பதவிக்காலம் மாத்திரம் நீடிக்கப்படவில்லை என்றும் அவருடைய பதவிக்கு பதிலாக எச்.டப்ளியூ குணதாச நேற்று புதன்கிழமை (02) பதவியேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஆணைக்குழுவின் செயலாளர் அவருடைய சேவைக்கால கடிதத்தை மீளப்பெற்றுக்கொண்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .