2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

லசந்தவின் சடலத்தை தோண்ட உத்தரவு

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலத்தைத் தோண்டியெடுக்குமாறு, கல்கிஸை நீதவான் நீதிமன்றம், இன்று வியாழக்கிழமை (09) உத்தரவிட்டது.

அதனடிப்படையில், கொழும்பு 02ஆம் இலக்க அறை நீதவான் முன்னிலையில்,
இம்மாதம் 27ஆம் திகதியன்று, அவரது சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான வழக்கு, கல்கிஸை நீதவான் மொஹமட் சஹாப்தீன் முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, லசந்தவின் சடலத்தைத் தோண்டுமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, நீதவான் உத்தரவிட்டார்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்க, கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று படுகொலை செய்யப்பட்டார். இவரது சடலம், கொழும்பு - பொரளை பொது மயானத்தில் புதைக்கப்பட்;டுள்ளது.

இவரது சடலம், மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளதால், சடலம் புதைக்கப்பட்ட இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X