2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

விகாரைகள், தேவாலயங்கள் சட்டமூலம்‘நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட மாட்டாது’

Gavitha   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல சமயங்களினதும் வணக்கஸ்தலங்களையும் சமய அடையாளங்களையும் நிறுவுவதை ஒழுங்குபடுத்துவதற்கெனக் கொண்டுவரப்படவுள்ள விகாரைகள், தேவாலயங்கள் சட்டமூலம் தொடர்பில், அனைத்து மகாநாயக்கத் தேரர்களின் ஒன்றிணைந்த கருத்தொன்று முன்வைக்கப்படும் வரையில், அச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதில்லை என்று நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கோரிக்கையினை அடுத்தே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.  

 முன்னதாக, கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இன்று செவ்வாய்க்கிழமை (04), விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் தொடர்பான சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக கூறியிருந்தார்.  

 இந்நிலையில், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தில், கட்சித் தலைவர்களுடனான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

இதன்போது, இச்சட்ட மூலத்தை, அனைத்து மகாநாயக்கர்களின் ஒன்றிணைந்த கோரிக்கை கிடைக்கும் வரை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காதிருக்க முடிவு செய்துள்ளதாக, திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .