2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் மாணவர் இருவர் காயம்: ஒருவரின் நிலை கவலைக்கிடம்

George   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிபிட்டிய மொரக்​கெட்டிய பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

13 மற்றும் 14 வயதுடைய மாணவர்களே இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மாணவர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மணலேற்றிச் சென்ற டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்களே காயமடைந்துள்ளதுடன் டிப்பர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .