2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் 9 வயது சிறுமி பலி

George   / 2016 மார்ச் 11 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலேவெல - கெக்கிராவ வீதியில், பல்பெதியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயது சிறுமி பலியாகியுள்ளார். முச்சக்கரவண்டி, எதிர்த் திசையில் வந்த சிறிய ரக லொறி ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட விபத்திலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் பயணித்த 3 சிறுமிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஒரு சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேவஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .