Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 04 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான 05 ஆண்டு காலப்பகுதிக்குள், விசர்நாய்க் கடி நோயினால் 175 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2010 ஆம் ஆண்டு 49 பேரும், 2011 ஆம் ஆண்டு 41 பேரும், 2012 ஆம் ஆண்டு 38 பேரும், 2013 ஆம் ஆண்டு 28 பேரும், 2014 ஆம் ஆண்டு 19 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விசர்நாய்க் கடி நோயினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மேற்குறிப்பிட்ட கடந்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் ரூபாய் 1,755 மில்லியனை அரசாங்கம் செலவு செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இது மொத்த சுகாதார செலவீனத்தின் 0.53 சதவீதமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago