Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-காஞ்னா குமார அரலியதாச
தம்புள்ள, இப்பன்கட்டுவையில் அமைந்துள்ள புராதன மயானத்தில் விஜயன் காலத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய மேலும் சில எச்சங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியமும் தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவகமும் வெளிப்படுத்தியுள்ளன.
விஜயனது காலத்துக்கு முற்பட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது குறிப்பிடத்தக்கதொன்று என தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்டவற்றில் இறந்தவர்களால் பயன்படுத்தப்பட்ட களிமண் பானைகளும் சிறிய கப்பல்களும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் 2,600 வருடங்கள் பழமை வாய்ந்தவை என அவர் மேலும் தெரிவித்தார். தவிர, பண்டைய கால இறுதிச் சடங்குகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த இடத்தை தோன்றும் பணி, ஒரு மாதத்துக்கு முன் மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகத்தின் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கபட்டதாகவும் இந்த மயானம் பாதுகாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்படும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago