2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெடிப்புக்குள்ளான மின்மாற்றி 30 வருடங்கள் பழைமையானது

Menaka Mookandi   / 2016 மார்ச் 16 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஞாயிறன்று திடீரென இடம்பெற்ற மின்சாரத் தடை தொடர்பில், மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுரேன் பட்டகொடவினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் கைச்சாத்துடன், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பியகம  மின் விநியோக நிலையத்தில் காணப்படும்  மின்மாற்றி வெடிப்புக்கு உள்ளானமையினாலேயே இந்த மின்தடை ஏற்பட்டதென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மின்மாற்றியானது, சுமார் 30 வருடங்கள் பழைமைவாய்ந்ததென குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மின்மாற்றியை, முழுமையாக பழுதுபார்க்க வேண்டியுள்ளது. இது தொடர்பில், பழுதுபார்க்கும் நிறுவனத்துக்கு கடந்த 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியன்று, மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், அந்த மின்மாற்றியை ஏன் முழுமையாக பழுதுபார்க்கவில்லை என்பது பிரச்சினைக்குரிய விடயமாகவே உள்ளது. இவ்வாறு பழுதுபார்க்காமையே, அது வெடிப்புக்குள்ளாகக் காரணமாகியிருக்கலாம் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .