2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

George   / 2017 ஜனவரி 03 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம - களுத்துறை வீதியில், முச்சக்கரவண்டி மற்றும் தனியார் பஸ் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டி.ஏ.லீலாவதி (வயது 69) மற்றும் ஏ.பிரியங்கனி (வயது 49) ஆகிய தாய், மகள் இருவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்​டியை செலுத்திச் சென்ற பெண்ணின்  கட்டுப்பாட்டை மீறிய முச்சக்கரண்டி, எதிர்த்திசையில் வந்த பஸ்ஸில் மோதியுள்ளது.

களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .