2025 மே 19, திங்கட்கிழமை

விமானப் படையின் அர்ப்பணிப்பை குறைத்து மதிப்பிடமுடியாது: ஜனாதிபதி

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலிப் பயங்கரவாதிகளை தோல்வியடைய செய்வதற்காக இலங்கை விமானப் படையினர் முன்னெடுத்த நடவடிக்கையை எப்போதுமே குறைத்து மதிப்பிடமுடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

திருகோணமலை சீன துறைமுகத்தில் உள்ள விமானப்படை முகாமில் நேற்று நடைபெற்ற கெடட் அலுவலர்களை அதிகாரி மட்டத்துக்கு தரமுயர்த்துதல் மற்றும் இலட்ச்சினையை அணிவித்தல் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த வைபவத்தில் கலந்துகொண்டு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
விமான பiயின் சேவையின் தரம் மற்றும் தரம் தொடர்பில் தான் திருப்தியடைகின்றேன்.

தாய்நாட்டை விடுவிப்பதற்காக உயிர்துறந்த சகல படைவீரர்களுக்கும், அங்கவீனமடைந்த படைவீரர்களுக்கும் நான்  கௌரவமளிக்கின்றேன்.

தாய் நாட்டின் பூமியை போல எட்டு மடங்கு விசாலமான இந்நாட்டின் கடல் எல்லையை பாதுகாக்குபம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விமானப்படையின் செயற்பாடு அளப்பரியதாகும்.

புதிய விமானப்படைத்தளபதியின் ஆதரவுடன் எதிர்காலத்தில் விமானப் படை அதிகாரிகள், நாட்டின் தேசிய பாதுகாப்பில் தங்களுடைய பொறுப்பை உரிய முறையில் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அதற்றாக புதிய தொழிற்நுட்ப அறிவுடன் கூடிய வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், மொத்தமாக 640 விமானப்படை வீரர்கள் பயிற்சியை முடித்து வெளியேறியதுடன், விமானப்படை வீரர்களால் ஜனாதிபதிக்கு விசேட அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.

மேலும், விசேட திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சிறப்பு பரிசில்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X