2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வெளிநாடு செல்ல முன்னாள் போராளிகளுக்கு அனுமதி

Menaka Mookandi   / 2017 ஜனவரி 27 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற நிலையில் விடுதலையான முன்னாள் போராளிகள், அவர்களின் தேவையின் நிமித்தம் வெளிநாடு செல்ல விரும்புவார்களாயின், அதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் மேற்கொள்ளத் தயாராக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மூவர், அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, இன்று இடத்பெற்றது. இதில் கலந்துகொண்ட, புனர்வாழ்வுத் திணைக்களத்தின் வன்னிப் பிரிவுப் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.ஹெமிடோன், உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

12 ஆயிரத்துக்கும் அதிகமானோர், இதுவரையில் புனர்வாழ்வு பெற்று, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும், இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .