Janu / 2026 மார்ச் 29 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலியந்தலை - கெஸ்பேவ மாற்று வீதியில், பணத்திற்காக மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி பந்தயங்களில் ஈடுபட்ட 11 இளைஞர்களை பிரதேச மக்களின் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு முச்சக்கரவண்டிகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் (WhatsApp) குழுவொன்றின் ஊடாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய, இரவு 7:30 மணியளவில் கெஸ்பேவ மாற்று வீதியில் ஒன்று கூடியுள்ள இந்த இளைஞர்கள், பணத்தை பந்தயமாக வைத்து இந்த சட்டவிரோத வாகன போட்டிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொலிஸார் முற்றுகையிட்ட போது, அங்கிருந்த சிலர் தமது மோட்டார் சைக்கிள்களை அவ்விடத்திலேயே கைவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

17 minute ago
22 minute ago
29 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
29 minute ago
44 minute ago