2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வடக்கு உதவி கலால் அதிகாரிக்கு பிணை

George   / 2015 நவம்பர் 06 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண உதவி கலால் அதிகாரியான கிரிஸ்ட் ஜோசப், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

10,000 பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 60 ஆயிரம் ரூபாயை இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இன்று 6ஆம் திகதி வரை, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்த  போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X