Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2016 மார்ச் 09 , பி.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
வடக்குப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட அம்மக்களின் தங்கத்தில் 40 கிலோகிராம் தங்கத்துக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க, மீட்கப்பட்ட தங்கத்தை ஆறு வருடங்களாகத் தடுத்து வைத்திருப்பது உசிதமானது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (09) பிரதமரிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார். அவரது பதிலுக்குப் பின்னர் குறுக்கு கேள்விகளை எழுப்பியதன் பின்னர் கருத்து தெரிவித்த போதே அனுரகுமார எம்.பி. மேற்கண்டவாறு கேள்;வி கேட்டு சுட்டிக்காட்டினார்.
முன்னதாகக் கேள்வியைக் கேட்ட நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி,
புலிகளிடமிருந்த பெருமளவிலான தங்கம் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் அறிக்கையிட்டன. அதில் கொஞ்சம், கடந்த கால தேர்தல்களின் போது அலரிமாளிகையில் வைத்து உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
அங்கிருந்து பெறப்பட்ட தங்கத்தின் நிறையை கிலோகிராமில் தருக. பொருட்களின் வகைகள் யாவை? அந்தப் பொருட்களை அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்று கேட்டிருந்தார்.
கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
'தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், அந்த வங்கிகளில் மூழ்கிப் போயிருந்த நகைகள் மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் என்று 150 கிலோகிராம் நிறையுடைய தங்கம் மீட்கப்பட்டதாக இராணுவம் அறிக்கையிட்டுள்ளது. அந்தத் தங்கத்தில், வளையல்கள், மாலைகள் மற்றும் மோதிரங்கள், ஏன் தாலிகளும் அடங்குகின்றன.
150 கிலோகிராம் தங்கத்தில் 32 கிலோகிராம் தங்கம், மத்திய வங்கியில் இருக்கின்றது. இவை 2010 செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் 2012 வரையிலும் 28 தடவைகள் கையளிக்கப்பட்டன.
இவற்றை ஆபரணங்கள் மற்றும் இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை மதிப்பீடு செய்தது. அதன் பிரகாரம், அவற்றின் பெறுமதி 131 மில்லியன் ரூபாயாகும்.
தங்கத்தை 2,292 பேர் பெற்றுக்கொண்டதாக ஊடகங்கள் அறிக்கையிட்டன. எனினும், பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத் தரவுகளில் 1,960 பேர் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட 150 கிலோகிராமில் 80 கிலோகிராம், தங்கத்துக்குரிய உரிமையாளர்கள் இனங்காணப்படாத நிலையில் அந்த 80 கிலோகிராம் இராணுவத்திடம் இருக்கின்றது. அவை இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று பதிலளித்தார்.
இந்த அவையில், வட பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். கட்டளையிட்ட அதிகாரியான சரத் பொன்சேகா அமைச்சர் இருக்கின்றார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் இருக்கின்றார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் நிலையியற் குழுவை நிறுவி உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்றார்.
இதன்போது எழுந்த அநுரகுமார திஸாநாயக்க, இராணுவத்திடம் இருப்பது அப்பிரதேச மக்களின் தங்கமாகும். அதனை எப்படிக் கொடுக்கப் போகின்றீர்கள், என்று வினவினார். பிரதமரின் பதிலின் பிரகாரம் 150 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டது. அதில் 32 கிலோகிராம் தங்கம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 80 கிலோகிராம் இராணுவத்திடம் உள்ளது. அப்படியாயின் 40 கிலோகிராமுக்கு என்ன நடந்தது?
தங்கப் புதையல் கிடைக்கவில்லை. இது மக்களின் தங்கம். தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்கம். அதற்கான பற்றுச்சீட்டு, டெக் இருக்கின்றன. ஆகையால் உரிமையாளர்களை இனங்காண்பது கடினமான விடயமல்ல. மக்களின் தங்கத்தை ஆறு வருடங்கள் தடுத்து வைத்திருப்பது உசிதமானது அல்ல என்;று சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், வடக்கு எம்.பிக்கள் அவையில் இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டுப்பார்ப்போம் என்று கூற, உடனடியாக எழுந்த ஸ்ரீதரன் எம்.பி, தமிழீழ விடுதலைப் புலிகளின் 'தமிழீழ வங்கியில்' என்னுடைய குடும்பம் அடகு வைத்த தங்கத்துக்கான ரசீது என்னிடம் இன்னும் இருக்கின்றது.
மக்கள் முகாம்;களில் இருந்த போது, அவர்கள் வைத்திருந்த ரசீதுகளின் பிரதிகளைப் படையினரிடம் கையளித்துள்ளனர் என்பதனால் இனங்காண்பது கடினமானது அல்ல என்றார்.
அதுமட்டுமின்றி கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அதனையும் தேடியறிந்து அவர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நின்றார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்கம் தொடர்பிலான அறிக்கை இன்று (நேற்று) காலையே கிடைத்தது. இதில் முரண்பாடுகள் இருக்கின்றன என்றார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago