2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வடபகுதியில் சூறாவளி அபாயம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 30 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதனால், இத்தாழமுக்கம் யாழ். குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதேவேளை, அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் இத்தாழமுக்கமானது சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு, இன்று புதன்கிழமை (30) மாலை அறிவித்துள்ளது.

1ஆம் திகதி (வியாழக்கிழமை) நள்ளிரவு இத்தாழமுக்கமானது, தமிழ் நாட்டின் வடபகுதியூடாக நகருமெனவும் 2ஆம் திகதி வரை காற்றுடன் கூடிய மழை காணப்படுமெனவும் வானிலை அவதானிப்பு நிலையத்தினால் தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளதென, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .