2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வத்தளை தமிழ் பாடசாலைக்கு மார்ச் 1 இல் அடிக்கல்

Princiya Dixci   / 2017 ஜனவரி 10 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

வத்தளையில் அமைக்கப்படவுள்ள தமிழ்ப் பாடசாலைக்கான அடிக்கல், எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி நாட்டப்படும் என, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோகணேசன், நேற்று (09) தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு, தான் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, அவர் தலைமையில், அவரது அலுவலகத்தில், நேற்று இடம்பெற்ற கூட்டத்தில், சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார மற்றும் காணி அமைச்சரான ஜோன் அமரதுங்க கலந்துகொண்டிருந்ததாகவும், அதன்பின்னர் கலந்துரையாடி, இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 

மேலும் இக்கூட்டத்தில், மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஷ்வரன், மாகாண கல்வியமைச்சின் செயலாளர், களனி கல்வி வலயப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தாகவும் அவர் குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .