Editorial / 2025 ஏப்ரல் 09 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாநகர சபைக்கு போட்டியிடும் ஒருவர், ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பகுதியைச் சேர்ந்தவர்.
ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஹம்பாந்தோட்டை பொலிஸில் செய்த புகாரைத் தொடர்ந்து, ஹம்பாந்தோட்டை சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அவர், புதன்கிழமை (09) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026