2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வர்த்தகர்களின் சடலங்களைக் கொண்டுச் சென்ற வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Editorial   / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்கம பிரதேசத்தில் இரு இளம் வர்த்தகர்கள் கடத்தி, கொலை செய்து, அவர்களது சடலத்தை கொண்டுச் செல்ல பயன்படுத்தப்பட்ட கெப் வாகனத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளார்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

வான் ஒன்றில் கடத்தப்பட்ட குறித்த இரு வர்த்தகர்களும் கொலை செய்யப்பட்ட பின்னர் கைப்பற்றப்பட்டுள்ள கெப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த கெப் வாகனத்தின் உரிமையாளர் அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகரால் வர்த்தகரிடமிருந்து கெப் வண்டி பெறப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .