2025 மே 21, புதன்கிழமை

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் தீர்த்தம் எடுக்கும் உற்சவம்

Freelancer   / 2022 ஜூன் 07 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான  தீர்த்தம் எடுத்தல் உற்சவம்  நேற்று (6) மாலை முல்லைத்தீவுக் தீத்தக்கரை  பகுதியில்  சிறப்பாக இடம்பெற்றது

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 30 ஆம் திகதி பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியிருந்தது

அதனைத் தொடர்ந்து நேற்று (6) உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகை தாய்க்கான விளக்கு எரிப்பதற்கான உப்பு நீரிணை  கடலிலே பெற்றுக் கொள்கின்ற அரிய நிகழ்வு இடம்பெற்று இருந்தது

அந்த வகையில் நேற்று (6) மாலை முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய முறைப்படி பறை வாத்தியம்  முழங்க அடியவர்கள் புடைசூழ பாரம்பரிய  வீதிகள்  வழியாகச் சென்று  தீர்த்தக்கரையில் அமைந்திருக்கின்ற முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .