Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 05 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
புலிச் சந்தேகநபர்களுக்கு எதிராக, விரைவாக வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட நீதிமன்றம் அமைப்பதற்கு இடமிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் குழு அடங்கிய நீதிமன்றம், அவ்வாறான வழக்குகளை விசாரணைக்கு முடியுமா என்பது தொடர்பில் சட்டமா அதிபர் மற்றும் பிரதம நீதியரசருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள நீதியமைச்சர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்ததாக சிங்கள இணையளத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
'தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை மூன்று வகைப்படுத்தலாம். அதில் ஒரு பகுதியினர் குற்றவாளிகளாவர். மற்றொரு பிரிவினருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது பிரிவினருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடுங்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாதவர்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சிகள் இல்லாதவர்களை விடுவிப்பதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது' எனவும் அவர் தெரிவித்தார். அவர்களை, பிணையில் விடுவிக்க முடியுமா என்பது தொடர்பில் தேடியறியப்படுகின்றது.
வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அவற்றுக்காக புதிய நீதிமன்றம் ஆரம்பிக்கப்படும். காலதாமதமின்றி அந்த வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்தி நிறைவுக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளதாக, அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .