Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா மாநகர சபையின் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம், உத்தியோகபூர்வமாகச் செயல்படுவதற்கு அடுத்த மாதம் 19 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
வவுனியா மாநகர சபையின் பிரதி மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன் வவுனியா மாநகர சபை எல்லைக்குள் இல்லாமல் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைக்கு உட்பட்ட எல்லைக்குள் வசிப்பவர் எனத் தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வவுனியா மாநகர சபை எல்லைக்குள் வசிக்காத ஒருவர் மாநகர சபைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டமை தவறென தெரிவித்து தேசிய மக்கள் கட்சியின் சார்பில் விஜயகுமார் என்பவரும் சுயேச்சை குழு உறுப்பினரான பிரேமதாஸ் சிவசுப்ரமணியம் என்பவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்ந்த் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கை கடந்த நான்கு தவணைகள் விசாரித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கந்த் தடை உத்தரவை வழங்கி இருக்கின்றது. (a)
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago