Editorial / 2019 ஜூலை 06 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
இராணுவத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இடம்பெறவுள்ள களியாட்ட நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணாமல் ஆக்கபட்ட உறவினர்களால், வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்னால், இன்று, ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ந்து 868 நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே, குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
காலை 10.30 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில், தேங்காய் உடைத்து விசேட வழிபாடுகளை மேற்கொண்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், கந்தசாமி கோவில் வீதி வழியாக மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து கண்டி வீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர்.
45 minute ago
1 hours ago
2 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago
10 May 2026